2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

நண்பர்கள் முத்தம் கொடுப்பார்களா? நடிகை கேள்வி

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரை சீரியலை விட பரபரப்பாகவும், திருப்பமாகவும் போய்கொண்டிருக்கிறது. ஈஸ்வர்-ஜெயஸ்ரீ- மகாலட்சுமி விவகாரம்.

என் கணவருடன் நெருக்கமாக இருக்கிறார் என்று மகாலட்சுமி மீது ஜெயஸ்ரீயும். அவள் தான் என் கணவருடன் நெருக்கமாக இருக்கிறர் என்று மகாலட்சுமியும் மாறி மாறி கூறி வருவதோடு அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக இருவருமே கூறுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஜெயஸ்ரீ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,“என் கணவர் ஈஸ்வரும் அவருடன் சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமியும் நாங்கள் நண்பர்கள் என்கிறார்கள். எந்த நண்பர்களாகவது ஐ லவ் யூ சொல்லி முத்தம் கொடுத்துக் கொள்வார்களா? அதுவும் என் கண் எதிரிலேயே செய்வார்களா?. இவர்கள் செய்தார்கள்.

என் கணவருடனான உறவை முடித்துக் கொள்ளுங்கள் என மகாலட்சுமியிடம் சொன்னேன். அதற்கு அவர், "அவன் தான் உன்னுடன் வாழப்பிடிக்கவில்லை என்கிறானே. விட்டுப் போக வேண்டியதுதானே. இன்னும் ஏன் அங்கு இருக்கிறாய்" என்று சொன்னார். 

நீ யார் அதை முடிவு செய்ய என்று மகாலட்சுமியிடம் நான் கேட்டேன். அதற்கு மகாலட்சுமி, இனி எல்லாமே நான் தான் முடிவு செய்வேன்" என்றார். இதற்கு என்ன அர்த்தம். எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--