Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 19 , பி.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
திருக்கோவில் பிரதேசத்தில் அரச காணிகளை, அரச காணிக் கட்டளைச் சட்டத்துக்கு முரணாக, பொருத்தமற்ற நபர்களுக்கு பகிர்ந்தளிக்க எந்தவோர் ஏற்பாடும் எமது பிரதேச செயலகத்தால் முன்னெடுக்கப்படவில்லையென, திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாக, சில சமூக வலைத்தளங்களில் திருக்கோவில், தங்கவேலாயுதபுரத்தில் அரச காணிகள் பொருத்தமற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்திருந்தன.
இது தொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலாளர் விவரித்ததாவது,
“நாட்டிலே ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை கருதி, ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய, உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில், சௌபாக்யா திட்டம் உட்பட மேலும் பல விவசாய உற்பத்தி திட்டங்களை விவசாயத் திணைக்களம் முன்னெடுக்கின்றது.
“அதன்படி, சுற்றுநிரூபத்துக்கமைவாக தரிசு நிலங்களாகக் கைவிடப்பட்ட வெற்றுக் காணிகளையும் விவசாயப் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துவது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கிராம சேவையாளர் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“இதனோடு இணைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிலுருவான கிராமசக்தி வேலைத்திட்டத்தக்கு ஒதுக்கப்பட்ட 25 ஏக்கர் அரச காணியில் மக்களை விவசாய உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கையும் என்னால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
“இவ்வாறான நடவடிக்கைகளையே சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, என்மீதும் அரசாங்கத்தின் மீதும் களங்கத்தை ஏற்படுத்து முயல்கின்றனர்” என்றார்.
11 minute ago
27 minute ago
30 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
30 minute ago
35 minute ago