Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 11 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், எம்.ஏ.றமீஸ், இர்ஷாத், எம்.எஸ்.எம். ஹனீபா, கே.எல்.ரி.யுதாஜித்
அரச, தனியார் அலுவலகங்களுக்கு கடமைக்குச் செல்லும் உத்தியோகத்தர்களுக்கு சில அறிவுரைகளை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விவரித்துள்ளதாவது, அரச, தனியார் ஊழியர்கள் வரவுப் பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து, தங்களது பேனாவைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்
உத்தியோகத்தர் ஒருவருக்கு காய்ச்சல், தடிமல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின், அவர்கள் கடமைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவ்வாறானவர்கள் வீட்டிலேயே இருந்து, மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
கட்டாயமாக முகக் கவசத்தை அணிந்து செல்லுங்கள் எனவும் அலுவலகங்களுக்குள் நுழையும் போது தங்களது சப்பாத்துகளின் அடிப் பாகங்களை தொற்று நீக்கிக் கொண்டு, அலுவலகத்துக்குள் நுழையுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், சக உத்தியோகத்தர்களிடம் கை கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டு, உத்தியோகத்தர்களை தொடுவதோ அவர்களது உபகரணங்களை பாவிப்பது, அருகில் செல்வதோ தவிர்க்கப்படவேண்டும் என்பதுடன், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago