Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 மே 27 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபையின் பகுதி நேர பொறியியலாளராக, கட்டடங்கள் திணைக்களத்தின் அம்பாறைப் பிராந்திய பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில், இன்று (27) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸ், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், வேலைகள் அத்தியட்சகர் வீ.உதயகுமார், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் உட்பட பொறியியல், திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago