Princiya Dixci / 2021 பெப்ரவரி 15 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் கொள்கைத் திட்டமிடலுக்கமைய, நாட்டில் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இரண்டு வீதிகள், 11 கோடி ரூபாய் செலவில் காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக, பொதுஜன பெரமுனக் கட்சியின் அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். றபிக், இன்று (15) தெரிவித்தார்.
நற்பிட்டிமுனை வீதி, மருதமுனை வீதி ஆகிய வீதிகளே 04 கிலோமீற்றர் காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் பல வருடங்களாக அபிவிருத்தி செய்யப்படால் குன்றும் குழியுமாகக் காணப்படும் இவ்வீதியால் பயணிக்கும் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் மிக விரைவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், நட்பிட்டிமுனை வடிகான் நிர்மானிப்புக்கு இரண்டாம் கட்டமாக 02 கோடி 50 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
57 minute ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
02 Feb 2026
02 Feb 2026