Princiya Dixci / 2021 பெப்ரவரி 21 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்
உலக புற்றுநோய் தினம், பெப்ரவரி 04ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி, பெப்ரவரி மாதம் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு புற்றுநோய் தொடர்பான அறிவுத்தல் நிகழ்வுகள், நாடுபூராவும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதன்படி, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையுடன் இணைந்து, மருதமுனை 'ரைடர்ஸ் கப் சைக்கிள் சவாரிக் கழகம்' ஏற்பாடு செய்த மாபெரும் சைக்கிள் சவாரி விழிப்புணர்வு நிகழ்வு, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் நேற்று (21) நடைபெற்றது.
மருதமுனை பிராந்திய கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு சைக்கிள் சவாரி, பெரியநீலாவணை வழியாகச் சென்று மருதமுனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை, சாய்ந்தமருது, கல்முனை நகர் ஊடாக சென்று பிராந்திய சுகாதார பணிமனையை வந்தடைந்தது.
இந்த நிகழ்வின் போது புற்றுநோயைத் தடுப்பதற்கு தினமும் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப்பழக்க முறைகள் மற்றும் மருத்துவ குறிப்புக்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஒலிபெருகி ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

9 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
02 Feb 2026
02 Feb 2026