Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 மே 20 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு நடவடிக்கையின் செயற்பாடுகளைப் பாராட்டி, கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட தொற்றுநோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என். ஆரிப், சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் முன்னெடுத்துச் செல்லப்படும் கொவிட்-19 தடுப்பு நடவடிக்கை செயற்பாடுகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரணையில், கொழும்பில் நேற்று (19) நடைபெற்றது.
சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி டொக்டர் அனில் ஜயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாட்டிலுள்ள 26 பிராந்திய தொற்று நோய் தடுப்புப் பிரிவுகளுக்குப் பொறுப்பு வைத்திய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago