Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஜனவரி 29 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கடந்த வாரம் 108 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டு அதில் அனுமன் கொடியை ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கொடிக்கம்பம் வைப்பதற்கு கிராம பஞ்சாயத்து அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், தேசியக்கொடிக்கு பதிலாக அனுமன் கொடி ஏற்றப்பட்டதாக புகார்கள் வரப்பெற்றதால், அனுமன் கொடியை அகற்றும்படி அதிகாரிகளை பஞ்சாயத்து நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து அனுமன் கொடியை அகற்றுவதற்காக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (28) சென்றனர். அப்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் தொண்டர்களும் போராட்டத்தில் இணைந்தனர். போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்எல்ஏ ரவி குமாரின் பேனர்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
நிலைமை மோசமடைந்ததால் பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் அனுமன் கொடியை அகற்றிவிட்டு தேசியக்கொடியை ஏற்றினர்.
கெரகோடு கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
2 hours ago