Freelancer / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு, மின்னணு சிகரெட் தடை சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், ஏற்றுமதி, இறக்குமதி செய்தல், விற்பனை , வினியோகம் செய்தல், இருப்பு வைத்தல், விளம்பரம் செய்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.
இ-சிகரெட்டின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்படவில்லை . இதற்கிடையே, இ-சிகரெ ட் தடை சட்டத்தில், சிறைத்தண்டனை , அபராதம் போன்ற கடுமையான விதிமுறைகள் இருப்பதையும் மீறி, இ-சிகரெட் சர்வசாதாரணமாக புழங்குவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, இ-சிகரெட் தடையை உறுதியுடன் அமல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மேலும், அந்த சிகரெட்டை விற்பனை செய்த 15 இணையதளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
16 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago