Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Janu / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்கானா மாநிலம், மெகபூபாபாத்தை சேர்ந்தவர் அஞ்சி. இவர் சொந்தமாக ஓட்டோ ஓட்டி வருகிறார். வாகன பெருக்கத்தின் காரணமாக சுற்றுச்சூழல் மாசு அடைவதால் வித்தியாசமாக ஏதாவது செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினார்.
அதன்படி அஞ்சு தனது ஓட்டோவின் மேற்கூரையில் வித்தியாசமான முறையில் பல்வேறு பூச்செடிகளை நட்டு நகரும் தோட்டம் அமைத்து உள்ளார்.
வித்தியாசமான முறையில் ஓட்டோ மீது பூந்தோட்டம் அமைத்துள்ளதை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்க்கின்றனர். மேலும் அவரது ஓட்டோவில் உள்பகுதியில் மின்விசிறியும் பொருத்தியுள்ளார். இவரது ஓட்டோ மீது பூச்செடிகள் வளர்ந்துள்ளதால் ஓட்டோவில் உள்பகுதியில் குளுமையாக உள்ளது.
அஞ்சுவின் ஓட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு வெப்பம் தெரியாமல் சில்லென்ற காற்று வீசுவதால் பயணிகள் இவரது ஓட்டோவில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
அஞ்சுக்கு அதிக அளவில் சவாரி கிடைப்பதால் கணிசமான அளவில் வருமானம் ஈட்டி வருகிறார். தற்போது கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் அஞ்சுவுவின் ஓட்டோவில் பயணிக்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago