Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 ஜூலை 20 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அந்தியூர்
தங்கள் தோட்டத்தில் விளைந்த பொருட்களை, அந்தியூர் சந்தையில் விற்பனை செய்வதற்காக,கொண்டு சென்ற விவசாயிகள் மீது கட்டடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று பேர் மரணமான சம்பவம் நேற்று அந்தியூரில் இடம்பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் திங்கட்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும். கொரோனா காரணமாக, மூன்று மாதங்களாக நடக்காமல் இருந்த வாரச்சந்தை நேற்று கூடியது.
பர்கூர் விவசாயிகள், தங்கள் தோட்டத்தில் விளைந்த பொருட்களை, அந்தியூர் சந்தையில் விற்பனை செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை இரவே அந்தியூர் வந்து பஸ் நிலையப் பகுதி, தேர் வீதியில் இரவு தங்கி, மறுநாள் காலை சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். அந்தியூர், தேர் வீதியில் ஒரு 'எலக்ட்ரிக்கல்' கடை முன்புறம், ஆறு பேர் இரவில் தூங்கியுள்ளனர்.
நேற்று அதிகாலை நேரம் கடையின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிலர் சிக்கினர்.அவர்களை அந்தியூர் தீயணைப்பு துறையினர், பொலிஸார் வந்து மீட்டனர்.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago