A.K.M. Ramzy / 2021 மே 24 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
'கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும், அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சை பெற, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கறுப்பு பூஞ்சை நோய் பரவல், மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களும் கறுப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆட்பட்டு வரும் செய்திகள், பெரும் கவலை தருகின்றன. கறுப்பு பூஞ்சை நோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த, தமிழக சுகாதாரத் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியமாக விட்டால், உயிருக்கே ஊறு விளைவிக்கும்.
கறுப்பு பூஞ்சை நோய்க்கான தடுப்பு மருந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், போதிய அளவில் தாமதமின்றி கிடைக்க, உடனே ஏற்பாடு செய்ய வேண்டும். கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி பிரிவுகளை அமைக்கவும், அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ், இலவச சிகிச்சை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
12 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
1 hours ago