A.K.M. Ramzy / 2021 மே 20 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
காணாமல் போன தமிழக மீனவர்கள் 9 பேரை உடனடியாக மீட்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த ஏப். 29 அன்று, கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர், இன்னும் கரை திரும்பாதது பெரும் கலக்கத்தையும், சோகத்தையும் அவரது குடும்பத்தினரிடையேயும், மீனவர்களிடையேயும் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதியன்று கடலுக்குச் சென்ற அவர்களது படகு, டவ்-தே புயல் எச்சரிக்கையை அடுத்துக் கரை திரும்பும்போது சிக்கி மூழ்கியதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாகை மீனவர்கள் 9 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மீனவர்கள் 9 பேரை உடனடியாக மீட்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
6 minute ago
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
1 hours ago