A.K.M. Ramzy / 2021 ஜூன் 01 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மராட்டியம்
மராட்டியத்தில் தினந்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளது.
பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மே மாதம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. தற்போது தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. தற்போது மாநிலத்தில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பொது மக்களிடம் ஒன்லைன் மூலமாக உரையாற்றினார். அப்போது அவர் மாநிலத்தில் வருகிற ஜூன் 15ஆம் திகதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக கூறினார். மேலும் தளர்வுகளையும் அறிவித்தார்.
10 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
1 hours ago