Janu / 2023 செப்டெம்பர் 05 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆந்திர மாநிலம், பார்வதிபுரம் மண்டலம், கும்ம லட்சுமி புரத்தை சேர்ந்த 8 பேர் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் படுகாயமும், 6 பேர் லேசான காயமும் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குருபம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அறிவிக்கப்படாத அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக இன்வெர்ட்டர் செயல் இழந்துவிட்டது.
இதனால் மின்சாரம் இன்றி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் வைத்தியர்கள் திணறினர். பின்னர் தங்களது கையடக்க தொலைபேசி உள்ள டோர்ச் வெளிச்சத்தில் உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தனர். இதனால் 2 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இதனை அறிந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் டாக்டர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

3 minute ago
5 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
5 minute ago
24 minute ago
25 minute ago