Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 06 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மாளிகையில் முதல் முறையாக திருமண விழா நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணிக்கு தலைமையேற்று இருக்கும் சி.ஆர்.பி.எப். வீராங்கனை பூனம் குப்தாவிற்கும், ஜம்மு காஷ்மீரில் பணியில் உள்ள சி.ஆர்.பி.எப். வீரரான துணை தளபதி அவினாஷ் குமாருக்கும் வரும் 12ஆம் திகதி, ஜனாதிபதி மாளிகையில் திருமணம் நடைபெறவுள்ளது.
இது ஜனாதிபதி மாளிகையின் வரலாற்றில் நடைபெற உள்ள முதல் திருமண விழாவாகும்.
பணியில் பூனம் குப்தாவின் அர்ப்பணிப்பு, தொழில் திறன் மற்றும் நடத்தை விதிகளை பின்பற்றுவதில் உள்ள கண்டிப்பு போன்றவற்றின் காரணமாக, அவரது திருமணத்தை ஜனாதிபதி மாளிகையில் நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளித்துள்ளார் என கூறப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள இந்த திருமண விழாவில், மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
14 minute ago
28 minute ago