A.K.M. Ramzy / 2021 மே 31 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை கருணாநிதி பிறந்த நாளில் விடுதலை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தால் சிறப்பகவிரக்குமென மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் எம்.தமிமுன் அன்சாரி தெரிவித்தள்ளார்.
மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் எம்.தமிமுன் அன்சாரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது;
அண்ணா பிறந்த நாள், எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.
இதேவேளை தமிழக மதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி வருகின்ற ஜூன் 3ஆம் திகதி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டால் இந்த ஆட்சிக்கு அது மேலும் சிறப்பு சேர்க்கும்.
சிறை தண்டனையின் நோக்கமே ஒருவரை திருத்தி, மீண்டும் சமூகத்துடன் வாழச் செய்வதே ஆகும். அந்த அடிப்படையில் சிறைவாசிகளின் எஞ்சிய கால வாழ்வில் வசந்தம் ஏற்படவும், அவர்களது குடும்பங்களில் மறுமலர்ச்சி ஏற்படவும் முதல்வர் ஸ்டாலின், கருணை உள்ளத்தோடு நல்லதொரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
13 minute ago
43 minute ago
53 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
53 minute ago
54 minute ago