2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

’மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது’

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 04 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுடெல்லி,

 

கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு 'பாரத ரத்னா விருது' வழங்க வேண்டும் என கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் ஆகியோருக்கு 'பாரத ரத்னா விருது' வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி இதுவேயாகும்.

இதுதான் தங்களின் குடும்பத்தினரையும், உயிரையும் கருதாமல் மக்களுக்காகப் பணியாற்றும் மருத்துவர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக அமையும். இதற்கு ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சி அடையும்” எனப் பதிவிட்டுளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .