Mithuna / 2023 டிசெம்பர் 13 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூர் பொலிஸ் கட்டுபாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ராஜ்பவனில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதைதொடர்ந்து வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு பொலிஸார் உடனடியாக ராஜ்பவனுக்கு விரைந்து சென்று அப்பகுதி முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் பெங்களூரு விதான் சவுதா பொலிஸ் நிலைய பொலிஸார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் பொலிஸார் உதவியுடன் ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.
இதில் அந்த தொலைபேசி எண் கோலார் மாவட்டம் கோலார் டவுன் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவருக்கு எந்த உள்நோக்கமும் இல்லை எனவும், விளையாட்டாக இதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
48 minute ago
1 hours ago