Freelancer / 2023 ஒக்டோபர் 01 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வயிற்றில் இருந்து பல்வேறு உலோகப் பொருட்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ள சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மோகா நகரில் வசிக்கும் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், பல மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதற்காக வைத்தியர்களிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன், கடுமையான காய்ச்சல், வயிற்று வலியுடன் குமட்டலும் இருந்துள்ளது.
இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றினுள் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது வயிற்று பகுதியை எக்ஸ் ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்து பார்த்த வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஸ்கேன் செய்யப்பட்டதில் அவரது வயிற்றில் பல உலோகப் பொருட்கள் இருப்பது தெரியவந்ததுள்ளது.
அதற்கமைய குறித்த . சுமார் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அவற்றை உலோகப்பொருட்களை அகற்றியுள்ளனர். வெளியில் எடுத்தனர்.
மேலும் அகற்றப்பட்ட உலோகப் பொருட்களில் இயர்போன், வாஷர், நட்டு மற்றும் போல்ட், வயர், ராக்கி, லாக்கெட், பொத்தான், க்ளிப், அலுப்புநாத்தி என பல பொருட்கள் காணப்பட்டுள்ளன.
இதுபற்றி அந்த நோயாளியின் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, அந்த நோயாளி மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இத்தனை பொருட்களையும் அவர் எப்படி விழுங்கினார் என்பது அவரது குடும்பத்தினருக்கே தெரியவில்லை.
வயிற்றுக்குள் இருந்த உலோகப் பொருட்களை சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியில் எடுத்தாலும், அந்த பொருட்கள் நீண்ட காலமாக வயிற்றில் தங்கியதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக உடல்நிலை சீரடையவில்லை. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 minute ago
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
46 minute ago
2 hours ago
2 hours ago