2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

நியூசவுத்வேல்ஸ் பொலிஸ் தலைமையக துப்பாக்கிதாரி அடையாளங்காணப்பட்டார்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 03 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசவூத்வேல்ஸ் பொலிஸ் படையின் பணியாளர் ஒருவரை சுட்ட பதின்ம வயது இளைஞன் பர்காட் ஜாஃபர் காலில் மொஹமட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டை நடாத்துவதற்கு முன்பு பள்ளிவாசலுக்கு சென்று விட்டே இவர் துப்பாக்கிசூட்டை நடாத்தியுள்ளார்.

பதினைந்து வயதான பர்காட், ரிவோல்வருடன் காணப்பட்டதாகவும், பலியான கேர்ட்டிஸ் செங்கை அவருக்கு தெரியாது எனவும் கூறப்பட்டுள்ளது. சிட்னி மேற்கில் உள்ள பராமட்டா பொலிஸ் தலைமையகத்தை விட்டு நேற்று மாலை 4.30 அளவில் கேர்ட்டிஸ் வெளியேறும்போதே பர்காத் சுட்டுக் கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துக்கு பதிலளிப்பதுக்காக தலைமையகத்தில் இருந்த வந்த அதிகாரிகளை நோக்கி பர்காத் சில துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும், எனினும் அதிகாரிகள் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் கொல்லப்பட்டிருந்தார்.

இவர் தனியாகவே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும், இவர் முன்னர் ஒருபோதும் பொலிஸின் கண்காணிப்பில் வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர் ஈரானில் பிறந்த சுன்னி முஸ்லிம் இனத்தவர் என அறியப்படுகிறது. இவர் ஈராக்-குர்டிஷ் பின்னணியைக் கொண்டுள்ள அகதி என நம்பப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .