Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2025 ஜூன் 08 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம். சனூன்
புத்தளம் கால்பந்தாட்ட லீக்கின் புதிய தலைவராக புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் முஹம்மது யமீன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை புதிய செயலாளராக அப்துல்லா முராதும், புதிய பொருளாளராக முஹம்மது ரஸ்லானும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கால்பந்தாட்ட லீக்கின் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யும் நோக்கில் அதன் வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் புத்தளம் மாநகர சபை விளையாட்டு அரங்கின் கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் எம்.எஸ்.எம். ரபீக் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யும் நோக்கில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.எம். நஜீமின் தற்காலிக தலைமையில் நடைபெற்ற அமர்வின் போதே புதிய நிர்வாகம் தெரிவானது.
லீக்கின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக முதலாவது புதிய கால்பந்தாட்ட தொடர் ஒன்றும் ஆரம்பமாகியுள்ளது.
இத்தொடர் ஒரு நாள் தொடராக இம்மாதம் 21ஆம் திகதி கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கடந்த காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்பிட்டியில் இருந்து புத்தளம் நகருக்கு வருகை தந்து போட்டி தொடர்களில் விளையாடிய கல்பிட்டி பேர்ள்ஸ் அணியை கெளரவிக்கும் நோக்கிலேயே இத்தொடர் கல்பிட்டி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago