Shanmugan Murugavel / 2024 மே 30 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எச்.எம்.எம். பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில், கிரிக்கெட்டில் ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயம் சம்பியனாக வெற்றிவாகை சூடியுள்ளது.
ஓட்டமாவடி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையுடனான இறுதிப் போட்டியில் வென்றே ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயம் சம்பியனானது.
ஐந்து ஓவர்களைக் கொண்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரிதிதென்ன இக்ரஹ் வித்தியாலயம், ஐந்து ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 70 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு 71 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அந்நூர் தேசிய பாடசாலை, ஐந்து ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களையே பெற்று ஆறு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
29 minute ago
39 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
39 minute ago
47 minute ago
2 hours ago