2021 ஜூன் 14, திங்கட்கிழமை

51 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

Editorial   / 2017 மே 24 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா, செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை - உதயசூரியன் கடற்கரை பகுதியூடாக கடத்தப்படவிருந்த 51 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சாவை இன்று (24) அதிகாலை கைப்பற்றியுள்ளதாக, வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே கொழும்புக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவத்தில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 51 இலட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .