2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இந்தியத் துணை ஜனாதிபதியை சந்தித்தார் சஜித்

Editorial   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குத் தனது முதலாவது அதிகாரப்பூர்வ இருதரப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:

  இந்தியத் துணை ஜனாதிபதிக்கும் எமக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது குறித்தும், பொருளாதாரத் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. இரு தேசங்களுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

  "இலங்கையும் இந்தியாவும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல; பொதுவான வரலாறு, பொதுவான சவால்கள் மற்றும் பொதுவான எதிர்காலத்தைக் கொண்ட உண்மையான கூட்டாளிகள்" என்று சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

  அனைத்து குடிமக்களும் இந்த இருதரப்புக் கூட்டுறவின் பலன்களை முழுமையாக அடைவதற்கு, அதீத அபிலாஷை, உறுதியான நோக்கம் மற்றும் நம்பிக்கையுடன் நாம் இணைந்து முன்னேற வேண்டிய தருணம் இதுவென அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .