Editorial / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (14) இரவு 10.00 மணி வரையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அநுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் 75 தொடக்கம் 100 மில்ல மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அத்துடன், குறித்த பகுதிகளில் தற்காலிகமாக 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை ஓரளவிற்கு அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் இரத்தினபுரி பம்பேகம பிரதேசத்தில் 113.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மின்னல் மற்றும் கடும் காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
1 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026