Freelancer / 2026 ஏப்ரல் 18 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2026 வசந்தகாலக் கூட்டத் தொடரில் இலங்கை தூதுக்குழுவினர் மிக முக்கியமான ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.
இதன்போது, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தலைமையிலான குழுவினர், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிரேஷ்ட தலைவர்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தநிலையில், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தைப் பாராட்டியுள்ள சர்வதேச நாணய நிதிய முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 5 மற்றும் 6 ஆவது மீளாய்வுகளுக்கான உடன்பாட்டை எட்டியதற்காக பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் சமீபத்திய சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள் இலங்கைக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளமையை சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இருப்பினும், எரிசக்தி விலைகளில் உரிய மாற்றங்களைக் கொண்டு வருமாறும், கொள்கை ரீதியான ஒழுக்கத்தைத் தொடர்ந்து பேணுமாறும் இலங்கை அதிகாரிகளை சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. (a)

2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago