Editorial / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக 2 முதியவர்கள் வந்தனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் 2022 மார்ச் மாதத்தில் இருந்து ஒன்றரை ஆண்டில் 271 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கை மன்னார் மாவட்டம் தலைமன்னாரைச் சேர்ந்த நேசப்பெருமாள்(62), கம்பஹா மாவட்டம் மல்வானையை சேர்ந்த ராவியத்துல் அதவியா (64) ஆகிய 2 பேரும் இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதிக்கு, திங்கட்கிழமை(25) அதிகாலை வந்திறங்கி உள்ளனர்.
தகவல் அறிந்த மெரைன் பொலிஸார் அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவர்கள் இருவரையும் ஒப்படைத்தனர். இவர்களுடன் சேர்த்து தமிழகம் வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.
15 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
36 minute ago