Editorial / 2026 ஏப்ரல் 13 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லிண்டன்
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று இன்று (13) மீட்கப்பட்டுள்ளது.
இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட துப்பாக்கி எதற்காக அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் இதற்குத் தொடர்புள்ளதா? அல்லது வேறு நபர்களிடமிருந்து கைமாற்றப்பட்டதா? போன்ற பல கோணங்களில் இளவாலைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தொடர்புடைய சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
9 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Apr 2026