Freelancer / 2026 பெப்ரவரி 07 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது பேச்சு நடத்தப்பட்டது.
டித்வா புயலின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு ரில்வின் சில்வா நன்றி தெரிவித்தார்.
இலங்கைக்கான தமது நாட்டு ஆதரவை இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தினார். இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியாவின் உதவிகள் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார். (a)

13 minute ago
43 minute ago
53 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
53 minute ago
54 minute ago