2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பிணை நிபந்தனையை நிறைவேற்றததால் மூவருக்கும் விளக்கமறியல்

Editorial   / 2025 ஜூன் 18 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் ரம்புக்வெல்ல மற்றும் மகள் அமலி ரம்புக்வெல்ல ஆகியோர் 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒன்பது சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மிலி ஜெயதுங்க இன்று உத்தரவிட்டார். பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால், சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .