Editorial / 2026 ஜனவரி 06 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன் வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பந்தனாவெளி சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 38 ஆர்.பி.ஜி குண்டுகள்,38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளை செவ்வாய்க்கிழமை (07) அன்று வாகரை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த வயலில் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்தவர் வயலை சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காக குழி தோண்டும் போது மர்மப் பொருட்கள் தென்படுவதை அவதானித்து வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற அனுமதியை பெற்ற விசேட அதிரடிப்படையினர் கொட்டும் மழையில் திருகோணமலை மாவட்ட விசேட அதிரடிப் படை உதவி அத்தியட்சகர் ஏ.எம.;ஜி. சுஜிவ அத்தனாயக்க தலைமையில் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனுஷ்க பண்டார அம்பந்தனாவெளி கிராம சேவகர் சீ.கஜேந்திரன், வாகரை பிரதேச விசேட அதிரடிப் படை பொறுப்பதிகாரி அமில சிந்தக்க பிரேமரத்ன ஆகிய அதிகாரிகள் முன்னிலையில் தோண்டும் பணி முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பொலித்தீன் பைகளில் பொதி செய்து நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்த 38 ஆர்.பி.ஜி குண்டுகள்,38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டு உள்ளது கடந்த யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் மருத்துவ முகாம் குறித்த பகுதியில் அமைந்திருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago