2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

Niroshini   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், நீதிமன்றக் கட்டளையை மீறி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக, பொலிஸாரால், நேற்று (08), முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸாரால், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுப் பொலிஸாரால், நேற்று  (08), AR வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, புதிய B அறிக்கையிலான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போரட்டத்தில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சிலரின் பெயரும் மதத்தலைவர்களின் பெயரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

 

 குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதியன்று, விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .