Editorial / 2023 செப்டெம்பர் 22 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீர்வைக் கட்டணம் செலுத்தாமல் டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 100க்கும் மேற்பட்ட மடிக்கணினிகளை வைத்திருந்த இந்தியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து வரும் இந்திய வர்த்தகர்களிடம் கொடுத்து இந்தியவுக்கு கடத்தலில் ஈடுபட்டு வந்த இந்திய பிரஜை ஒருவரே வியாழக்கிழமை (21) கைது செய்யப்பட்டார் என கரையோர பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இந்தியாவின் சென்னையில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் உதவியாளர் எனவும், மேற்படி கோடீஸ்வர வர்த்தகர் இவற்றை இலங்கைக்கு கொண்டு வந்து இந்தியாவில் உள்ள வர்த்தகர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வியாபார நிமித்தமாக நாட்டிற்கு வந்து காலை மற்று மாலை வேளைகளில் இந்தியாவுக்குத் திரும்பும் இந்திய வர்த்தகர்களின் கைகளில் மடிக்கணினிகளை சந்தேகநபர் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்த வர்த்தகர்கள் தமது தனிப்பட்ட மடிக்கணினி என அறிமுகப்படுத்தி அவ்வப்போது இந்தியாவிற்கு எடுத்துச் செல்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். .
19 Apr 2026
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Apr 2026
19 Apr 2026