Freelancer / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முனைக்காடு கடற்கரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) சந்தேகத்துக்கிடமான முறையில் இலங்கை படகு ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது..
கைவிட்ட நிலையில் இருந்த குறித்த படகில் இருந்து மர்ம நபர்கள் இருவர் தப்பி ஓடியதாக அப்பகுதி உள்ள மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு சென்று பொலிஸார் இலங்கை படகை மீட்டு கடத்தல் காரர்கள் யாரேனும் வந்தார்களா? அல்லது சமூக விரோதிகள் யாரேனும் வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படகில் இருந்து 2 பேர் அதி வேகமாக தப்பித்து சென்றதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
படகு மற்றும் வெளி இணைப்பு இயந்திரம்(எஞ்சின்) ஆகியவற்றை கைவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்ற பகுதி கடத்தல் தங்கம், கஞ்சா உள்ளிட்ட கடத்தல் நடைபெறும் பகுதியாக உள்ளதால் வந்தவர்கள் கடத்தல் காரர்களாக இருக்கக்கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். R
21 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
49 minute ago
2 hours ago