Editorial / 2025 நவம்பர் 27 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடமலுவ காவல் நிலையத்தில் இரவு நேரக் கடமையை முடித்துவிட்டு, தனது வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்த உடமலுவ காவல் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர், மரம் விழுந்ததில் பலத்த காயமடைந்து வியாழக்கிழமை (27) உயிரிழந்தார்.
பரசங்கஸ்வெவ ரயில் நிலைய சந்திப்பில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான தர்மதாச உடுகம என்ற பொலிஸ் சார்ஜென்டே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.
புதன்கிழமை (26) இரவுக் கடமையை முடித்துக்கொண்டு, வியாழக்கிழமை (27) தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, வீதியின் குறுக்கே விழுந்த மரம் மோதியதில் படுகாயமடைந்தார் 1990 சுவ செரிய ஆம்புலன்ஸில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவில் சார்ஜென்ட் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவரால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
13 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
5 hours ago
5 hours ago