Freelancer / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், சென்னையில், திரையரங்கம், வணிக வளாகம் போன்றவற்றில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால் மூன்றாம் அலையை தடுக்கலாம் என, பொது சுகாதாரத்துறை நிபுணர் குழந்தைசாமி கூறினார்.
தமிழகத்தில், சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 40 பேருக்கு, 'எஸ் ஜீன்' மாறுபாடு காரணமாக, ஒமிக்ரான் வைரஸ் அறிகுறி கண்டறியப் பட்டுள்ளது.
இவர்களது சளி மாதிரிகள், பெங்களூரு, புனே ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
எனவே, 'ஒமிக்ரான் போன்ற வைரஸ் பரவ துவங்கினால், மக்கள் தொகை அடர்த்தியால், சென்னையில் மின்னல் வேகத்தில் பாதிப்பை சந்திக்க நேரிடும்.
மீண்டும் ஒரு பேரிடர் சூழலை எதிர்கொள்ள வேண்டி வரும்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, திரையரங்கம், துணி, நகை கடைகள், வணிக வளாகங்கள் போன்ற மூடப்பட்ட பகுதிகளில் அதிக கட்டுப்பாடுகள் தேவை.
இங்கு அதிகளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நேர கட்டுப்பாடு, தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி, முக கவசம் அணிவது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலக வளாகங்களிலும், ஜன்னல், கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும்.
அப்போது தான், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம். மூன்றாம் அலை கொரோனாவில், தடுப்பூசி போட்டவர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டால், பெரியளவில் உடல்நல பாதிப்புகள் இருக்காது. ஆனால், தடுப்பூசி போடாத, முதியோர், நாள்பட்ட நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை நிலைக்கு செல்லக்கூடும்.
25 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
2 hours ago