Editorial / 2021 ஏப்ரல் 06 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுமுறை வழங்குவதற்கு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மறுத்துவிட்டார்.
“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சபையில் விடுமுறையை அனுமதிக்க முடியாது” என சபாநாயகர் அறிவித்தார்.
“சட்டத்தின் பிரகாரமே நான் செயற்படுவேன். அவருக்கான விடுமுறையை அனுமதிப்பதற்கு எனக்கு இச்சந்தர்ப்பத்தில் முடியாது. வழக்கின் தீர்ப்பு இதுவரையிலும் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எங்களால் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது” என்றார்.
பாராளுமன்றம் இன்று (06) கூடியவேளையில், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மூன்று மாதங்கள் விடுமுறை வழங்குவதற்கான அனுமதியை, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ கோரிநின்றார். அதன்போதே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

23 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
53 minute ago
2 hours ago