Editorial / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

மகரகம, பமுணுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, அவ்வீட்டின் மேல்மாடியில் வசித்து வந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு சனிக்கிழமை (18) இரவு தகவல் கிடைத்துள்ளது. தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்ட போதிலும், மேல்மாடியில் இருந்த 55 வயதுடைய தாயும், 16 வயதுடைய அவரது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் அப்பகுதியில் தற்காலிகமாக வாடகைக்கு வசித்து வந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் (46) மற்றும் அவ்வீட்டின் உரிமையாளர் (76) ஆகியோர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், 76 வயதுடைய வீட்டின் உரிமையாளரே இந்தத் தீவைப்பை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago