Princiya Dixci / 2021 பெப்ரவரி 13 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென, அரச வைத்தியதிகரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
குறித்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்ததாவது, “ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்தப் புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் பரவக் கூடுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அய்வுக்கூடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“அதாவது, தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 800 - 1,200 வரை அதிகரிக்க கூடும். எனவே, இதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும்” என்றார்.
புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் பரவல், இதுவரை கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
19 minute ago
22 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
22 minute ago
30 minute ago