Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மார்ச் 17 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பதுர்தீன் சியானா, ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை மாவட்டத்தில் பயன்படுத்தப்படாதுள்ள தரிசு நிலங்களில் எவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வது என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமாரவின் ஏற்பாட்டில் புதன்கிழமை (16) நடைபெற்ற கூட்டத்தின்போதே இது தொடர்பில் ஆராயப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்துக்கு அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு வழி கிடைத்துள்ளது. இந்நிலையில், இம்மாகாணத்திலுள்ள வளங்களை இனங்கண்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான புதிய திட்டங்களை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய முதலீட்டுத் திட்டங்களின் மூலம் இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .