Editorial / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
ஆசிரியர்களது சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டுமென வலியுறுத்தி ஆசிரியர்களால் நடத்தப்படும் விடுமுறைப் போராட்ட வியூகம் மாற்றப்பட வேண்டுமெனக் கோரி, ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோஸப் ஸ்டாலினுக்கு, கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், ஆசிரியர்களது போராட்டத்துக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் தனக்கு மாற்றுக் கருத்து இல்லை எனவும் ஆனால், ஆசிரியர்களால் நடத்தப்படும் போராட்டம், மாணவர்களின் கல்வி நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் அமைய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து பாடசாலைகளுக்குத் தொடர் விடுமுறைகள் வழங்கப்பட்டமையால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், ஆசிரியர்களது போராட்டத்தாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு ஆசிரியர்கள் ஆளாகி விடக்கூடாதெனக் கேட்டுக்கொண்டார்.
எனவே, விடுமுறைப் போராட்டத்துக்குப் பதிலாக பரீட்சைக் கடமைகள், தேர்தல் கடமைகள், வினாத்தாள் திருத்தும் பணிகள் போன்றவற்றுக்கு விண்ணப்பிக்காமல் கடமை தவிர்ப்புப் போராட்டம் போன்ற மாற்று வழிகளைத் தெரிவுசெய்யுமாறு, அவர் மேலும் அக்கடித்தில் கேட்டுக்கொண்டார்.
40 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
48 minute ago