Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீசான் அஹமட், பதுர்தீன் சியானா
மூதூர், கிண்ணியா, தோப்பூர், கந்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், குச்சவௌி ஆகிய பகுதிகளில் புதிய வட்டார பிரிவில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா மஜ்லிஸ் ஸூராவின் பொதுச்செயலாளர எம்.எஸ்.எம்.நியாஸ் தெரிவித்தார்.
மாவட்டத்தில் வட்டார எல்லைப்பிரிவில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்வது தொடர்பாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில், கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, புதிய வட்டாரபிரிவில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அமைச்சர் பைஷல் முஸ்தபாவிடம் ஆதார பூர்வமான சான்றுகளை அமைச்சரிடம் கையளித்ததோடு, தீர்க்கமான முடிவினை பெற்றுத்தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
கோமரங்கடவெல பிரதேச சபைக்கு 5831 வாக்காளர்களுக்கு 13 பிரதிநிதிகளும் 21069 வாக்காளர்களைக்கொண்ட கிண்ணியா நகர சபைக்கு 10 பிரதிநிதிகளும் வழங்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கோமரங்கடவெலவுக்கு 450 வாக்காளர்களுக்கு 01 பிரதிநிதியும் கிண்ணியா சகர சபைக்கு 2,100 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதியும் என பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட்டு பாரபட்ஷம் காட்டப்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது, இப்பிரச்சனை தொடர்பாக அமைச்சரவை உப குழுவில் சமர்ப்பித்து தீர்க்கமான தீர்வொன்றினை பெற்றுத்தருவதாகவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா வாக்குறுதியளித்ததாகவும் கிண்ணியா ஸூரா மஜ்லிஸ் சபையின் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago