2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண விவசாய போதனாசிரியர்களுக்கு நியமனம்

Menaka Mookandi   / 2012 ஜூன் 05 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

கிழக்கு மாகாணத்தில் விவசாயப் போதானாசிரியர்கள் ஒன்பது பேருக்கு நேற்று திங்கட்கிழமை மாலை புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இன விகிததசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நியமனம் திருகோணமலை மாவட்டத்திற்கு 03 பேரும். ஆம்பாறை மாவட்டத்திற்கு 03 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 03 பேருமாக மொத்தம் 09 பேருக்கு வழங்க்ப்பட்டிருக்கின்றன.

இவர்களுக்கான நான்கு நாள் சேவை முன் பயிற்சி பிரிவிரால் திருகோணமலை மாவட்ட பயிற்சித் திணைக்களத்தில் நேற்று திங்கள் கிழமை வரை பயிற்ச்சிகள் வழங்கப்பட்டு நியமனக் கடிதங்களும் கையளிக்கப்பட்டது.

இந்நியமனம் வழங்கும் நிகழ்வில் மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹூசைன் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் தி,குகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .