Editorial / 2022 ஜனவரி 12 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிந்தனைக்கமைய, 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெற்றுச் சுவர்களைஅழகுபடுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கொரோனாவுக்குப் பின்னர் அத்தொற்று நோய் சம்பந்தமான பல விழிப்புணர்வுகள் இக்காலப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன.
அதனடிப்படையில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி காரியாலயத்தின் முன்னால் உள்ள சுவர்களில் தனவந்தர்களின் உதவியுடன், பொதுமக்களையும், பாடசாலை மாணவர்களையும் விழிப்புணர்வூட்டும் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம்.நெளபரின் வழிகாட்டலில், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உத்தியோகத்தர் ஏ.எஸ்.எம்.முர்சித்தின் பூரண ஒத்துழைப்புடன் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கொரோனா பற்றிய விழிப்புணர்வுப் படங்களும் நீரின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் படங்களும் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு - றாசிக் நபாயிஸ்)



6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago