Princiya Dixci / 2022 ஜூலை 25 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

(படங்கள் - எம்.றொசாந்த்)
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்தப் பெருந் திருவிழாவுக்கான கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு, நேற்று (24) இடம்பெற்றது.
வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன், பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களுக்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.
கோவிலின் வருடாந்தப் பெருந்திருவிழா, எதிர்வரும் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 25 நாட்கள் திருவிழா இடம்பெறவுள்ளது.



35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago