Editorial / 2023 ஜனவரி 10 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வை, தமிழ் அரசியல் கட்சிகள் ஒரணியில் திரண்டு முன்வைக்கவேண்டும் அப்படி முன்வைக்காவிட்டால் மக்களாகிய நாங்கள் தேர்தலில் வீடு, தேடிவரும் போது வாக்களிக்கமாட்டோம் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (10 ஜனவரி) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடக்கு,கிழக்கில் 8 மாவட்டங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றுபடுமாறு வலியுறுத்தி கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் இன்று 10 ஆம் திகதிவரை தொடர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில், இறுதி நாளான இன்று (10) காலை 10 மணிக்கு நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு போராடினர்.
(கனகராசா சரவணன்)


33 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago