Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, இன்று ஆரம்பித்தது. இதன் முதல்நாள் முடிவில், புதுமுக வீரரின் சுழற்பந்தில் தடுமாறிய இங்கிலாந்து அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
சிட்டகொங்கில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய அறிமுக வீரர் பென் டக்கெற், இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை இப்போட்டியில் படைத்த அலஸ்டெயர் குக் இருவரையும் 18 ஓட்டங்களுக்கே இழந்தது. 3ஆவது விக்கெட்டையும் 21 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, 5 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறியது.
பின்னரே, மொய்ன் அலி, ஜொனி பெயர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தில், அவ்வணி ஓரளவு போராட்டமான நிலையை அடைந்தது. துடுப்பாட்டத்தில் மொய்ன் அலி 68, ஜொனி பெயர்ஸ்டோ 52, ஜோ றூட் 40, கிறிஸ் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், தனது அறிமுகத்தை மேற்கொண்ட 18 வயதான மெஹெடி ஹஸன் மிராஸ், ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுழற்பந்து வீசும் சகலதுறை வீரரான இவர், தனது திறமையான சுழற்பந்துவீச்சால், முக்கிய வீரர்களான ஜோ றூட், கரி பலன்ஸ், மொய்ன் அலி, ஜொனி பெயர்ஸ்டோ ஆகியோரினதும், அறிமுக வீரரான பென் டக்கெற்றினதும் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர, ஷகிப் அல் ஹசன், இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
மெஹெடி ஹஸன் மிராஸ் தவிர, வேகப்பந்து வீச்சாளரான கம்ருல் இஸ்லாம் றப்பியும் பங்களாதேஷ் சார்பாக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டதுடன், சகலதுறை வீரரான சபீர் ரஹ்மான், டெஸ்ட் போட்டிகளில், தனது அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago