2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இலங்கைக் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெண்கள் அணிக்கும் அவுஸ்திரேலிய பெண்கள் அணிக்குமிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டுப் பெண்கள் அணிகளும், இருதரப்பு கிரிக்கெட் தொடரொன்றில் பங்குபற்றும் முதலாவது சந்தர்ப்பமாக அமையவுள்ள இந்தத் தொடரில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு மேலதிகமாக, ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியொன்றும் உள்ளடங்கியுள்ளது.

இந்தத் தொடர், ஞாயிற்றுக்கிழமை (18) தம்புள்ளையில் இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருடன் ஆரம்பிக்கவுள்ளது.

தலைவி ஷஷிகலா சிரிவர்தனவின் காயம் காரணமாக, அணியை, சாமரி அத்தப்பத்துவே வழிநடத்தவுள்ளார்.

இலங்கைக் குழாம்: சாமரி அத்தப்பத்து, பிரசாதனி வீரக்கொடி, டிலானி மனோதரா, நிபுனி ஹன்சிகா, சாமரி பொல்கம்பொல, இஷானி லொக்குசூரிய, உதேஷிக பிரபோதனி, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, அச்சினி குலசூரிய, இனோஷி பிரியதர்ஷனி, இமல்கா மென்டிஸ், அமா காஞ்சனா, ஹர்ஷித மாதவி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .