Shanmugan Murugavel / 2016 நவம்பர் 16 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. இப்போட்டி, விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில், எதிர்பாராத விதமாகச் சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, வெற்றி - தோல்வியற்ற முடிவைப் பெற்றுக் கொண்டிருந்தது. அத்தோடு, போட்டியில் வெற்றிபெறும் நிலையிலும், அவ்வணி காணப்பட்டிருந்தது. அவ்வாறான சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய தன்னம்பிக்கையுடன், இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
மறுபக்கமாக, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள், இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்களை ஓரளவு இலகுவாகக் கையாண்டிருந்த நிலையில், தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துடன், உலகின் முதல்நிலைப் பந்துவீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளிட்ட இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறங்குகின்றனர்.
காயம் காரணமாக முதலாவது போட்டியில் பங்குபற்றியிருக்காத லோகேஷ் ராகுல், தனது உடற்றகுதியை நிரூபித்துள்ளதால், கௌதம் கம்பீருக்குப் பதிலாகக் களமிறங்கவுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முதலாவது போட்டியின் ஆடுகளத்தில், எதிர்பார்த்ததை விட அதிகமான புல் காணப்பட்டது (அதனால், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள், பந்தை அதிகம் திருப்ப முடிந்திருக்கவில்லை) என, இந்திய அணித்தலைவர் விராத் கோலி, தனது அதிருப்தியை வெளியிட்டிருந்த நிலையில், இப்போட்டியின் ஆடுகளம், எவ்வாறு அமையுமென்பது கேள்வியாகவே அமைந்துள்ளது. ஆனால், "நடுநிலையான" ஆடுகளமொன்று வழங்கப்படும் என, ஆடுகளப் பராமரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாவது போட்டியில், அனுபவம் குறைந்த இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதித்த இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் அதை அனுமதிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago